ஆசிரியர்கள் - அதிபர்கள் அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாட்டின் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் தற்போது 75 சதவீதமான கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
மண்டபங்களுக்கான கட்டணத்தை 40 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகத்திற்கான சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களில் (25,26,27) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் நாடகம் மற்றும் கலைப் பாடத்திற்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்கும் முகமாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை முறையாக அமுல்படுத்தாத தொழில் திணைக்களம் மீது வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
ஆசிரியர்கள், அதிபர்கள் சார்பில் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் (23,24) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை (25) நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் அதிபர் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு வட மாகாண ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண கிளை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களால் எதிர்வரும் திங்கள்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு இலங்கை கல்வி சமூக சம்மேளனம், ஆசிரியர் விடுதலை முன்னனி, மலையக ஆசிரியர் முன்னனி, முற்போக்கு ஜனநாயக ஆசியர் சங்கம் என்பனவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டும் வகையில் எதிர்வரும் 25ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அதிபர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.