நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில், தொழிற்சங்கங்கள் இன்று விசேட அறிவித்தலை விடுத்துள்ளன.
All Stories
மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளைமறுநாள் (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று (11) மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
மூத்த தொழிற்சங்கவாதி, சமூச செயற்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர் தோழர் லீனஸ் ஜயத்திலக்க காலமானார்.
அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டமையை கடுமையாக கண்டிப்பதாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அகிம்சை முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதலை தடுக்க முற்படாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ன பதவி விலக வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நேற்று (09) நடத்தப்பட்ட குண்டர் தாக்குதல்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளன.
நாட்டில் இன்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன் கிழமை (11) வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவசரக்காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மரண அடியெனச் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டித்து நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவையாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.