ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாதிருப்பின் எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
All Stories
15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' என்ற கோசத்தை முன்னிறுத்தி வீட்டுப் பணியாளர் தொழிற் சங்கமான 'ப்ரொக்டெக்' சங்கம் அட்டனில் மே தின ஊர்வலத்தையும் மக்கள் கருத்தாடலையும் முன்னெடுத்தது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று செயற்படுவதோடு, நலன்புரி விடயங்களையும் பெற்றுத்தரும் எனஅதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே தாங்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்வதாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நியமன அதிகாரத்தின் கீழ் இணைந்து சேவைகளின் பதவிகளில் பதில் கடமை பணிபுரிவதற்கான நியமனங்கள் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2017/19 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வியல் டிப்ளோமாதாரர்களுக்கு அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் காலி முகத்திடல் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றது.
மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.