அவசரகால சட்டத்தை மீளப்பெற வேண்டும்: போராட்டக் களத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு

அவசரகால சட்டத்தை மீளப்பெற வேண்டும்: போராட்டக் களத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு

அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி நாளை தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவித்தலில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவே நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அவர் வீட்டுக்கு செல்லாமல் தமது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். போராட்டங்களை அடக்குமுறை அடக்குமுறை மூலம் அடக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றார்.

இந்த நிலையில்தான் தற்போது அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அவசரகால சட்ட அமுலாக்கப்பட்டதை நாங்க முழுமையாக எதிர்க்கின்றோம. இதற்கு யாரும் அஞ்ச மாட்டோம். தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்ற சந்தர்ப்பத்தில் இப்படியான சட்டங்களின் மூலம் அதனை அடக்க முடியாது.

எனவே தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் என்ற அடிப்படையில் நாங்கள் நாளை (09) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவரையும் நாங்கள் அழைக்கின்றோம். அவசரகால சட்டத்தை நீக்குமாறு முன்னெடுக்கும் போராட்டத்தில் நாம் அங்கு இணைவோம். அவசரகால சட்டத்தை மீளப்பெறும் வரையில் எங்களது போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

2021 இல் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - மத்திய வங்கி தகவல்

பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு...

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image