அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை (24) முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
நாட்டிற்கு அன்னிய செலாவணியை பெற்றுத் தருவதில் மலையக உழைக்கும் சமூகம் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் எனினும் அவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் இன்னமும் உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமேதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கான சமுக பாதுகாப்பு நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது உட்பட சில கோரிகையை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு மனுவொன்றுக்கு நேற்று (19) கையெழுத்திட்டது.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மாவட்ட இலங்கை அரச ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுப்பது தொடர்பான சுற்றரிக்கையை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று வௌியிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை கடனான பெற நீங்கள் தகுதியுடையவரா என்ற தற்போது இணையத்தில் பரீட்சித்துப் பார்க்க முடியும் என்று தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்லைன் முறையில் http://www.labourdept.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்தனுடாக அங்கத்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 வீத கடனைப் பெற தகுதியுடையவரா இல்லையா என்பது தொடர்பான தகவல்களைப் இதனூடாக பெற முடியும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
E
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்றும் ஆனால் அதில் கற்கும் போதனாசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.