லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 24 மணி நேரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க, வைத்தியசாலையில் பெண் விசேட வைத்தியர் ஒருவரின் மருத்துவமனையில் நீண்டகால பிரச்சினை உள்ள 'ஏற்றுக்கொள்ள முடியாத' மற்றும் 'தொழில்முறையற்ற' நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடிருந்தார்.

தொடர்ச்சியாக பல மருத்துவர்கள் குறித்த பெண் வைத்தியர் குறித்து முறைப்பாடுகள் செய்த போதும் அப்பிரச்சினைக்கு சரியான முறையில் தீர்த்து வைக்க வைத்தியசாலை பணிப்பாளர் தவறியுள்ளமையினால் இப்போராட்டம் முன்னடெுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) டொக்டர் அசேல குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு சங்கம் அழுத்தம் செலுத்தியபோதும், ஏற்கனவே மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், ஏழு நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.

அதற்கமைய, வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவசர சிகிச்சைகள் தேவைக்கேட்ப தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் குறித்த அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் தனக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவர் கடுமையான அணுகுமுறைக்கு பெயர் பெற்றதால், அவரது நடத்தை சில காலமாக ஒரு பிரச்சினையாக இருந்ததாக ஒப்புக்கொண்ட பணிப்பாளர், எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மேற்படி விசேட வைத்தியரின் கீழ் பணியாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட வைத்தியர் இணைக்கப்பட்டுள்ள விடுதியில் நோயாளர்களை அனுமதிப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. எவ்வாறாயினும், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மருத்துவரை நீக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ எனக்கு அதிகாரம் இல்லை” என்றும் பணிப்பாளர் சுட்டிக்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சங்கம் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image