பட்டதாரி ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது!

பட்டதாரி ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது!

கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்றும் ஆனால் அதில் கற்கும் போதனாசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அப்பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் உருவாக்கப்படுவதனால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருட டிப்ளோமா கற்கைக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள். நான்கு வருட பட்டப்படிப்பை பெறக்கூடிய பல்கலைகழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

அதற்கமைய, தற்போதுள்ள 19 கல்வியற் கல்லுரிகள் ஒரு பல்கலைக்கழகமாகவும் அதற்கேற்ற பீடங்களாகவும் மாற்றப்படும். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் கல்வியமைச்சின் கீழ் தொடர்ந்தும் இருக்கும்.

ஒழுக்கமான பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று வடமேல் மாகாண கல்வித் தர அபிவிருத்தி தொடர்பில் அதிபர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image