வேலைவாய்ப்பினை ஏற்படுத்த செயற்குழு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு

வேலைவாய்ப்பினை ஏற்படுத்த செயற்குழு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கியமான அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கப்பட்டு தொழில் இன்மையை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்த செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செயற்குழுவில் கல்வி, நிதி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத்துறை ஆகிய அமைச்சுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட தொழில் இழப்புக்களை நிவர்த்து செய்யும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது முத்தரப்பு பங்களிப்புடன் இக்குழு உருவாக்கப்பட்டது. மீள் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக குழுவினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போது தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவியை வழங்கும் நோக்கில் உலக தொழிலாளர் மேற்கொண்ட விரிவான ஆய்வு, இறுதி அறிக்கை அமைச்சிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.

 அதிகரித்த வேலை வாய்ப்புகள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, இந்த வாய்ப்புகளுடன் தனிநபர்களை இணைக்க தகுதி மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் பொறுப்பாகும்.

"அமைச்சுக்களுடன் இணைந்த கூட்டு நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் குறித்த செயற்குழு விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தனிப்பட்ட மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்க விரும்புகிறது ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image