பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமான பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
All Stories
தொழிற்சங்கம் ஒன்றை நிறுவுவதற்கு 100 உறுப்பினர்கள் இருப்பது அவசியம் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார் அமைச்சர் ரமேஷ் பத்திரண.
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி 2023 தொழிலாளர் சட்டச் சீர்த்திருத்தங்கள் ( தொழில் சட்ட மறுசீரமைப்பு) தொடர்பில் தொழில் சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதுதொடர்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் (06) நாளை மறுதினமும் (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்களை திருத்த எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.