2016 - 2019 காலப்பகுதியில் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதிய உரிமையை வழங்குக

2016 - 2019 காலப்பகுதியில் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதிய உரிமையை வழங்குக

016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்களின் சட்ட உரிமையை வழங்குமாறே நாம் கோருகிறோம் என்று ஓய்வூதியம் பெறுவோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் குழந்தைகளின் வருமானம் மற்றும் திருமணம் ஆகியவற்றுக்காக கடன் பெற்றுள்ள நிலையில் ஓய்வூதியம் வழங்காவிடின் அந்த கடனை எவ்வாறு செலுத்துவது? 2

ஓய்வூதிய உரிமையுள்ளவர்களுக்கு அதனை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், அவ்வாறு இல்லாவிடில் நாம் அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம். இது தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (13) இவ்வளக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நாளை மறுநாள் (14) தொடக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வூதியதாரர்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யத் தயாராக உள்ளோம் என்றும் நேற்று (11) தெஹிவல தேசிய தொழிற்சங்க மத்தியநிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான சௌபாக்கியத்தின் நோக்கு கொள்ளை பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் எமக்கு நினைவில் உள்ளது. ஓய்வூதியக்காரர்களுக்கு அமைதியான ஓய்வு வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று 2020 ஜனவரி மாதம் 2ம் திகதி அவர்களுடைய அமைச்சரவை கூட்டத்தில் 2016 தொடக்கம் 2019ம் வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுடைய ஓய்வூதியத்திற்கான சட்டரீதியான உரிமையையும் ஓய்வூதிய உரிமையையும் ரத்து செய்ய தீர்மானிக்கிறார்கள்.

 

பல்வேறு தரங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருந்தனர். கிடைக்கும் ஓய்வூதியத்தை நம்பி அவர்கள் பலவற்றை செய்தனர். ஓய்வூதியத்தை எதிர்பார்த்து, அதனை நம்பி அவர்கள் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிலையில் அது இல்லாமாக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்ய முடியும்? வேறெந்த வருமானமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கான ஒரே வருமானம் ஓய்வூதியம் மாத்திரமே. அதனையும் பறித்துக்கொண்டால் அவர்களின் நிலை என்னாவது தற்போதைய அரசாங்கம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முன்னெடுக்கும் போராட்டங்களை தடை செய்ய கொவிட் 19 தொற்றை பயன்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image