Online கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகுகின்றனர்

Online கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகுகின்றனர்

இணையவழி (Online) கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் இன்று முதல் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள்; தெரிவித்துள்ளன.

 
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக போராடிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டனர். எனினும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
 
தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 
இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இணையவழி கற்பித்தல் முறைமையில் இருந்து விலகுவதுடன், 2,500 மத்திய நிலையங்களின் பணிகளில் இருந்தும், உயர்தரப் பரீட்சை கடமைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகளில் இருந்தும் இன்று முதல் விலக உள்ளதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image