வார இறுதியில் மின்தடை அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வௌியானது

வார இறுதியில் மின்தடை அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வௌியானது

வார இறுதியில் (23,24) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நாளைய (23) தினம் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.20 மணிமுதல் இரவு 9.20 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

4000 பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க நடவடிக்கை

அதிபர் ஆசிரியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image