சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பலவீனமான முகாமைத்துவமே காரணம்!

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பலவீனமான முகாமைத்துவமே காரணம்!

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏற்படவிருந்த சுகாதார சேவை சிக்கலை இவ்வருட ஆரம்பத்திலேயே ஏற்படுவதற்கு சுகாதார நிருவாகத்தின் தவறான தீர்மானங்களும் பலவீனமான முகாமைத்துவமுமே காரணம் என்று சுகாதார தொழல் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய சுகாதார அமைச்சர் பதவியை பொறுப்பேற்றபோது முகக்கவசம் அவசியமில்லை என்று அறிவித்திருந்தபோதிலும் சுகாதார அமைச்சு அதனை கட்டாயமாக்கி வௌிியிட்டுள்ள காரணங்களில் எதுவும் மாற்றமடைந்தில்லை என்று அச்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவது விஞ்ஞானரீதியான காரணம் என்றபோதிலும் நீக்குவதும் விஞ்ஞானரீதியான காரணமாக இருக்க வேண்டும். குறித்த அமைச்சர் பதவியேற்பில் வௌியிட்ட வெறும் செய்தியாக மாத்திரமே இருக்கக்கூடாது.

புதிய சுகாதார அமைச்சர் இன்னும் இரு மாதங்களுக்கு மாத்திரமே இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image