கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் பல இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

நாட்டின் எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் தற்போது 75 சதவீதமான கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுமான பொருட்களின் விலைகளின் சடுதியான அதிகரிப்பு காரணமாக நாட்டில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் உப தலைவர் எம்.டி. பொல் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய சூழ்நிலையில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டிப்பர் மணல் லாரியின் விலை 8000 ரூபாவால் அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் இந்த நிலைமை காரணமாக நாட்டில் சுமார் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image