கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
All Stories
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான அனுமதி கோரி இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் முன்வைத்த முன்மொழிவை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
இத்தாலியில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து 68,000 இலங்கையர்கள் நாடுதிரும்புவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரையும் அரசாங்கத்தின்கீழ் முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக இம்மாதம் 21ஆம் திகதி தொடக்கம் உத்தியோகபூர்வமாக விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணியாளர்களின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையின் பின்னணியில், மாபியா செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
நேற்று (04) காலை 8.30 தொடக்கம் 24 மணி நேரத்திற் பல்வேறு நாடுகளில் இருந்து 594 இலங்கையர்கள் 9 விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளனர் என்று விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கத்தாரின் பாதைகளில் உள்ள உரிய பாதசரிக் கடவைகளைப் பயன்படுத்தாமல் விரும்பிய இடங்களால் பாதைகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும்
வௌிநாடுகளில் இருந்து 526 இலங்யைர்கள் இன்று (27) காலை நாடு திரும்பியுள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக தாய்நாட்டுக்கு வர விரும்பிய இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையினூடாக இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்னளர்.
அதற்கமைய, மாலைதீவில் இருந்து ஒருவரும், கட்டாரில் இருந்து 130 பேரும் அவுஸ்திரேலியாவில் இருந்து 68 பேரும் ஜப்பானில் இருந்து 74 பேரும் ஐக்கிய அமீரகத்தில் இருந்த53 பேரும் ஜோர்தானில் இருந்த 200 பேரும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, மேலும் 75 பேர் டுபாய், இத்தாலி, துருக்கி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரவுள்ளனர் என்று கொரோனா ஒழிப்பிற்கான தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.