கத்தாரில் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணி ஆரம்பம்

கத்தாரில் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணி ஆரம்பம்

அமெரிக்க மற்றும் ஜேர்மன் இணை தயாரிப்பான பைசர் மற்றும் பயோன்டெக் கொரோனா தடுப்பூசி, கடந்த 21ம் திகதி கத்தாரை வந்தடைந்த நிலையில், தடுப்பூசி போடும் பணி நேற்றுமுன்தினம் (23-12-2020) புதன்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன.

முதல் தடுப்பூசியானது கத்தார் பல்கலைக்கழக முன்னால் தவிசாளர் அப்துல்லாஹ் அல் குபைஷிக்கு (79) (Dr Abdullah Al Kubaisi) வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பில் உள்ள பெரியவர்கள், கடுமையான நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தொலைபேசி அல்லது குறுந்தகவல் மூலம் தொடர்பு கொண்டு இடப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத்தில் கிடைக்கப் பெற்றுள்ள தடுப்பூசிகள் பின்வரும் கிடைக்கும் 7 ஆரம்ப சுகாதார மையங்கள் கிடைக்கப்பெறும் என்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

  1. Al Wajba Health Centre
  2. Leabaib Health Center
  3. Al Ruwais Health Center
  4. Umm Slal Health Center
  5. Rawdat Al Khail Health Center
  6. Al Thumama Health Center 
  7. Muaither Health Center

மூலம் : கத்தார் தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image