ஜப்பான் குடிவரவு தடுப்பு முகாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது இலங்கை பெண் உயிரழந்துள்ளார்.
All Stories
போலி வீசாக்களை பயன்படுத்தி ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட இருவரை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நேற்று (11) கைது செய்தனர்.
ஜப்பானில் இலவசமாக தொழில்வாய்ப்பை பெறுவது தொடர்பிலான தௌிவுபடுத்தல் நிகழ்வொன்று எதிர்வரும் 20ம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையமொன்றை நிறுவுவதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அவ்வாறான 100-க்கும் அதிகமான நிலையங்கள் காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஹோட்டல்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களாக இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நிலையங்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உகந்ததா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான அனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் COVID-19 ஒழிப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அனுமதியளிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில் நிமித்தம் வௌிநாடுகளில் உள்ள 21 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்ப்பார்ப்பில் தம்மை பதிவு செய்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, குவைத், கட்டார் மற்றும் துபாய் உள்ளிட்ட 14 நாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
நியுஸ் பர்ஸ்ட்
இத்தாலியின் ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெலிவேரிய, நெதுன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த சுப்புன் ஹிருண பெரேரா என்ற 32 வயது நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசசபை உறுப்பினரும் ஆசிரியருமான சச்சினி செவ்வந்தி செனவிரத்னவின் கணவரான சுப்புன் ஒரு குழந்தையின் தந்தையாவார்.
சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த குவைத் அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான தடை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் செய்திகளுக்கமைய மாலை 5.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். இந்நடைமுறையானது எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையின் உதவியுடன் இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வூரடங்கு நடைமுறையில் இருக்கும் சமயத்தில் பள்ளிவாசலுக்கு நடந்து செல்ல முடியும். இது தவிர மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சந்தை போன்ற நாளாந்த நடவடிக்கைகளுக்கு செல்வதற்கான அனுமதி ங்கபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊரடங்கு நடைமுறையில் இல்லாத பகல் நேரங்களில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவுகளை வீடுகளுக்கு அழைப்பித்துக்கொள்ளவும் வாகனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு பயணிகள் மட்டுமே மோட்டார் வாகனத்தில் பயணிக்க முடியும். பொது மக்கள் அமர்ந்திருக்கக்கூடிய பொதுவிடங்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் உதவியுடன் தற்காலிக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் நிமித்தம் சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான 266 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானமொன்றில் இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பல கட்ட சோதனைகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதையடுத்து டுபாய் விமான நிலையத்தில் தற்போது 'ஸ்மார்ட் டிரவல் (Smart Travel) முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக பயணிகள் தமது அடையாள ஆவணங்களை பயன்படுத்தாமல் பயணிக்க உதவுகிறது.
பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - முக மற்றும் கருவிழி என்பவற்றினூடாக அடையாளங்காணப்படுகிறது - பயணிகள் இப்போது தங்கள் பயணிக்கவுள்ள விமானம் மற்றும் ஏனைய வசதிகளை இதனூடாக சரிபார்க்கலாம். இலகுவாக விமானநிலையத்திற்குள் சென்று விமானத்தில் செல்ல முடியும்.
எதிர்காலத்தில், குடியகழ்வு முனையங்கள் இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் நேரடியாக விமானநிலையத்திற்குள் செல்லமுடியும்.அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க மக்கள் விமான நிலையம் வழியாக உலாவ முடியும். குடியேற்ற முறைகளை முடிக்க எடுக்கப்பட்ட நேரம் ஒரு நபர் எவ்வளவு விரைவாக நடக்க முடியும் என்பதைப் பொறுத்தது என உயரதிகாரி ஒருவர் கருத்து வௌியிட்டுள்ளார்.. ”
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் (டி.எக்ஸ்.பி) ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் தொடர்பு இல்லாத பாதை, 2019 ஆம் ஆண்டில் கெய்டெக்ஸில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது, பெப்ரவரி 22 திங்கள் அன்று குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தில் (ஜி.டி.ஆர்.எஃப்.ஏ) உயர் அதிகாரிக இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இப்புதிய தொடர்பு இல்லாத ஸ்மார்ட் பயண முறைக்கு அடித்தளமிட்டது. தொடர்புகளில் பரவும் தொற்றை தவிர்க்க பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பை இப்புதிய முறை குறைக்கிறது. குறிப்பாக செக் இன் கவுண்டர் முதல் விமானத்தில் ஏறும் வரையில் தொடர்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ள வகையில் இப்புதிய முறை தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
''நாடுதிரும்பும் இலங்கையர்கள் தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், அவர்கள் 14 நாள் கட்டாய தனிமைக்காக விடுதிகளுக்கோ, நிலையங்களுக்கோ அனுப்பப்படக்கூடாது. அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அரசுக்கு என் ஆலோசனை''
இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி பண மோசடி செய்வது தொடர்பில் தூதரகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டு இம்மோசடியில் குழுவொன்று இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக தூதரகத்திற்கு புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்புகொண்டு பணம் சேகரிக்கப்படுவதாகவும் தூதரகத்தினால் இவ்வாறு பணம் சேகரிக்கப்படுகிறதா? அதற்கான அரச அனுமதி உள்ளதா என்று வினவுவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளதது.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் லெபனானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நிதி சேகரிக்க எந்தவொரு தனிநபருக்கோ, அமைப்புக்கோ அனுமதி வழங்கப்படவில்லையென்றும் எனவே இவ்வாறு நிதி சேகரிப்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானில் இருந்து இலங்கை வரும் விமானங்களை தரையிறக்குவதற்கு அனுமதி தேவையென இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை அறிவித்துள்ள நிலையில் சில விமான டிக்கட் பிரதிநிதிகள் பயணிகளுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்குகின்றனர் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. பெய்ரூட் விமானநிலையமானது பயணிகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானங்களுக்கான அனுமதி டிக்கட் (Boarding Pass) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஆயிரத்து 504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.