கட்டுநாயக்க விமானநிலையத்தை திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டது!

கட்டுநாயக்க விமானநிலையத்தை திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டது!

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

"நாட்டைத் திறக்கும் முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை முதல் இதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். சுகாதாரத் துறையுடன் சேர்ந்து வழிகாட்டுதல்களை உருவாக்கினோம். ஆனால் கொவிட் -19 இன் இரண்டாவது அலை காரணமாக எங்களால் அதை செயல்படுத்த முடியவில்லை, ”என்று அவர் கூறினார்.

இலங்கையர்களை வெளிநாட்டிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்கான விமானங்களின் எண்ணிக்கையை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கமைய வாரமொன்றுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வர 5 விமான சேவைகளை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டுக்கு சுமார் 70,000 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 60,000 பேர் அரச உதவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர். ஏனைய பத்தாயிரம் பேர் தமது சொந்த செலவில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

"வௌிநாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியை விரைவுபடுத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். அதன்படி மத்திய கிழக்கில் இருந்து இலங்கையர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து ஐந்தாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 280 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் ”என்று அமைச்சர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image