சுமார் 9 மாதங்கள் மூடப்பட்டிருந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) திறக்கப்பட்ட நிலையில் முதலாவது விமானம் வந்தடைந்தது.
All Stories
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் கடந்த, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் 7 விமானசேவைகள் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுதிரும்ப முடியாமல் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 511 இலங்கையர்கள் நேற்று(09) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று (20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டின் எல்லை கொவிட் 19 பரவலில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஜப்பான் தனது நாட்டுக்குள் நுழைய 11 நாடுகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இன்று (14) தொடக்கம் இலங்கை உட்பட பல நாடுகள் ஜப்பானுக்குள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைக்கும் செயன்முறையானது, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வெளிப்படையானதுமாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிநோக்கில் சென்று நாடு திரும்ப முடியாது பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவோர் குறித்து அரச கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று (13) தொடக்கம் தினமும் புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கொவிட் 19 தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பொறியில் துறையில் ஆழமான அனுபவமுள்ள வௌிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் வரவேற்புள்ளது.
தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுப் பரவல் காலப்பகுதியில் இலங்கை வருபவர் தொடர்பில் மேலதிக பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான அனுமதி கோரி இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் முன்வைத்த முன்மொழிவை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.