கொவிட் தொற்றாளர் 60 வீதத்தால் அதிகரிக்கலாம்- போர்த்துக்கல் அச்சம்

கொவிட் தொற்றாளர் 60 வீதத்தால் அதிகரிக்கலாம்- போர்த்துக்கல் அச்சம்

டெல்டா திரிபு வைரஸ் பரவலுடன் கொவிட் 19 நான்காம் அலை மிக வேகமாக ஆரம்பிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக போர்த்துக்கல் அச்சம் வௌியிட்டுள்ளது.

டெல்டா திரிபு பரவல் காரணமாக தலைநகரில் தொற்றாளர் அதிகரிப்பு 60 வீதத்தால் அதிகரிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே முடக்கல் தளர்த்தப்படாத நிலையில் பல பிரதேசங்கள் உள்ள நிலையில் தலைநகருக்குள் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏனைய பிரதேசங்களுடனான தொடர்பு கடந்த வாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்துகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்த்தா டெமிடோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image