UAEயிலிருந்து எவ்வளவு தங்க நகைகளை நாட்டுக்கு கொண்டு செல்லாம்?

UAEயிலிருந்து எவ்வளவு தங்க நகைகளை நாட்டுக்கு கொண்டு செல்லாம்?

தெற்காசிய நாடுகளின் சுங்கச் சட்டங்களுக்கமைய இந்தியர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 100,000 இந்திய ரூபா (Dh4,945) பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு எடுத்துச் செல்ல முடியும்.

மலபார் குழுமத்தின் தலைவர் எம் பி அஹ்மட் வழங்கிய தகவல்களுக்கமைய, தெற்காசிய சுங்கச் சட்டங்களுக்கமைய, ஒரு வருடங்களுக்கு மேல் வௌிநாட்டில் தங்கியிருக்கும் ஆண் ஒருவர் 50,000 இந்திய ரூபா பெறுமதியான தங்க நகைகளை தம்மோடு கொண்டு கொண்டு செல்ல முடியும். பெண் பயணி 100,000 இந்திய ரூபா (Dh4,945) தங்க நகை நகைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிட்டத்திட்ட 3.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தங்கத்திற்கு பிரபலமான 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் டுபாயில் தங்க நகைகளை கொள்வனவு செய்யவே விரும்புகின்றனர். மேலும் இந்தியாவில் இருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சுற்றலாப்பிரயாணிகளாக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் போது தங்கம் வாங்கவென்றே டுபாய் செல்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய தங்க சந்தைகளில் ஒன்றான இந்தியா, உலகில் முன்னணி தங்க மையமாக தன்னை மாற்றுவதற்காக பெறுமதியான உலோகங்களிலான நகைகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஆபரணங்களுக்கான கட்டாய அடையாளத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image