எதிர்வரும் 9ம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.
சிறு எண்ணிக்கையானவர்களின் பொறுப்பற்ற செயல்களால் மீண்டும் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கனியவள கூட்டுத்தாபன மற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று மதியம் 12 மணிக்கு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, இலங்கை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம், கொலன்னாவ பிரதான களஞ்சியம் மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பனவற்றுக்கு முன்னாள் இன்று மதியம் இடம்பெறவுள்ளது.
சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி எதிர்வரும் 9ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வங்கி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்பட ஏனைய சலுகைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு வருடங்களுக்கு மேலாக கைச்சாத்திடப்படவில்லை என்று இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி பேரணியாக வந்த அதிபர் ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பொது மற்றும் மாகாண அரசசேவை இல MN-04 உடன் தொடர்புடைய சேவை பட்டதாரிகள் மற்றும் பயிற்சி பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் 8ம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அன்று ஒரு நாள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலய முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தொற்று நிலை இன்னும் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் கர்ப்பிணி ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளில் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் மேற்கொள்ளும் நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக தீர்க்கப்படாத அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேறு வழியின்றி போராட்டத்தை கையில் எடுத்துள்ள அதிபர் ஆசிரியர்கள்