பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர்கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
All Stories
மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் குறித்து தீர்மானிக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் நாளை (25) அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வி நிறைவாண்டை உரிய வகையில், நிறைவுறுத்துவதற்கான மாற்று வழிகளை பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அநாவசிய செலவுகளுக்காக அரசாங்கம் கடந்த 16 மாதங்களில் 1300 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 64 பில்லியனை அரசாங்கத்தினால் ஒதுக்க முடியாதா? என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கேள்வியெழுப்பியுள்ளது.
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், ஆசிரியர், அதிபர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்து அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு 03 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்க எமது அரசு தீர்மானித்தது.
வங்கி ஊழியர்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அறிக்கைகள் வௌிவந்துள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் CBEU) உறுதியளித்துள்ளார்.
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்றும், நாளையும் பாடசாலைகளுக்கு சென்று, சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை பங்களிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கோரியுள்ளார்.