மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் தொற்றாளர்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டால் தொற்றாளர்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

சிறு எண்ணிக்கையானவர்களின் பொறுப்பற்ற செயல்களால் மீண்டும் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

இதுவரை விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் சிலரது பொறுப்பற்ற நடத்தை காரணமாக எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்று 10 -25 கொவிட் மரணங்கள் சம்பவிக்கின்றன. அத்துடன் தொற்றாளர்கள் நாளொன்றுக்கு 500 -600 வரை அடையாளங்காணப்படுகின்றனர். குறிப்பாக மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு. ஆகிய மாவட்டங்களில் தினமும் 50 இற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (03) யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image