நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் தற்போது, 30 ஆயிரம் அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

உயர்தர பாடங்களுக்கு மாத்திரமின்றி, ஏனைய தரங்களின் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே, பாடங்களுக்கு அவசியமான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும்.

முறையான ஆசிரியர் உள்ளீர்ப்பு இடம்பெறாதமையே இந்த பற்றாக்குறைக்கு காரணம். எனவே, ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image