இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்று அகப்படுத்தப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
All Stories
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் நிறைவடைந்து சில மணி நேரங்களில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு என்பது நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்கும் நிலை அல்ல என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சிற்கு புதியதாக 136 சுகாதார அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்த 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு இம்முறை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.
மலையக பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கல்விமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொலைதூர ரயில் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் ரயில் திணைக்களம் ஒழுங்கான நடவடிக்கையை எடுக்காமைக்கு உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல.சுமை தாங்கிகள். தோட்டத் தொழிலாளர்களுக்க தேவை உழைப்புக்கான ஊழியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல என்று என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது என தொழில் அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கின்றார். நான் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முதல் வலய ரீதியாக மின் துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.