மின் துண்டிப்புக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி

மின் துண்டிப்புக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி

நாளாந்தம் மின்சார துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

தமது ஆணைக்குழு வழங்கிய அனுமதிக்கு அமைவாக இன்று முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேவைக்கான எண்ணெய் கிடைக்காவிடத்து, நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சார விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய மின்சார துண்டிப்பு இடம்பெறும் நேரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மாலை இ6 மணிமுதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரம் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது.

கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து மின்னுற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெய் மற்றும் டீசல் என்பன கிடைக்காவிடத்து மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image