கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, பாடசாலைகளுக்கான விடுமுறைக் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
ரயில்வே துறையில் சுமார் 7,000 வெற்றிடங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் 2021 டிசம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவில் வாழும் மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
வருகைக் கொடுப்பனவு 4000 ரூபாவை ஒரே தடவையில் நிறுத்தப்பட்டமை மற்றும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள 5000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி அநுராதபுரம் பிரதேசத்தில் அமைந்நுள்ள ஆடை உற்பத்திச் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று (02) போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இன்று (31) தொடக்கம் தடுப்பூசி வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமது சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நியாயத்தை நிறைவேற்றுமாறும் கோரி, இலங்கை தோட்டத் சேவையாளர் சங்க உறுப்பினர்களால் மஸ்கெலியாவில் அமைதி போராட்டம் நேற்று முன்தினம் (31) முன்னெடுக்கப்பட்டது.
இன்று முதல் பெப்ரவரி மாதம் முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வர்த்திக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்டாமல் ஐந்தாயிரம் கொடுப்பனவு உட்பட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாட்டில் மேலும் 82 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.