தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
25 விடயங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் மற்றும் க.பொ.த உயர்தர சித்திபெற்றோரிடமிருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆரம்ப பிரிவு, இரண்டாம் மொழி தமிழ், சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், கர்நாடக சங்கீதம், நடனம் (பரதம்), தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல், புவியியல், இந்து தர்மம், வரலாறு, குடியியல்கல்வி, மாணவர் ஆலோசனை, றோமன் கத்தோலிக்கம், அரபி, இஸ்லாம், விசேட கல்வி, மனையில், அரசியல் விஞ்ஞானம், வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் கணக்கியல் ஆகிய விடயங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகமையுடையவர்கள் சரியான முறையில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 12ம் திகதி அல்லது அதற்கு முன்னர் தென் மாகாண கல்வியமைச்சின் இணையளத்தளமான (www.edumin.sp.gov.lk) ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பங்களை அனுப்பிய பின்னர் அதன் பிரதியை பதவிரக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கோரப்படுகிறீர்கள்.