கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, பாடசாலைகளுக்கான விடுமுறைக் காலம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சகல அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மாரச் மாதம் 7ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.