பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவுள்ளதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
All Stories
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு, மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தொழிலாளர் இழப்பீடு ஆணையாளரின் அதிகாரங்களை தொழிலாளர் தீர்ப்பாய சபைக்கு மாற்ற எதிர்பார்ப்பதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின்போது, சித்திர பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கப்பெறாமை தொடர்பில் கம்பஹா வலைய கல்வி காரியாலயத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கிடைக்கும் நிதி வருமானமாக கருதி வரி செலுத்த தாம் தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆசிரியர்களுடைய சம்பளத்தில் இருந்த முரண்பாட்டை நீக்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு, அரச தாதியர் சங்கத்திற்கும், அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளுக்கு உரிய பதிலில்லை- மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்
தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராட்டததை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் ஆகிய தீர்மானித்துள்ளன.
நியமனம் பெற்ற பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் உள்ள தடைகளை சுட்டிக்காட்டியும் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று எ்திர்வரும் 21ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க அங்கத்தினர் இன்று (10) அடையாள வேலைநிறுத்தப்போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர் சேமலாப நிதியம் உட்பட சேவை நிதியங்களுக்கு அரசாங்கத்தின் 25 வரி விதிப்புக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக தனியார்துறை ஊழியர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.