தடுப்பூசி வாரம் ஆரம்பம்

தடுப்பூசி வாரம் ஆரம்பம்

இன்று (31) தொடக்கம் தடுப்பூசி வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுடையே தடுப்பூசி பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இலகுபடுத்தும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்வாரத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்திலும் தடுப்பூசி வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரை பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவரும் இந்த ஒரு வார காலப்பகுதியில் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது வைத்தியசாலைக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் யாருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தப்போவதில்லை. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிப் பெற்றுள்ளனர். தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தவறுவதன் இறுதி பலன் மரணமாக இருக்கலாம். எதிர்காலத்தில் பொதுவிடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டமையை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image