ETF, EPF நிதியத்துக்கு வரி செலுத்துவது சாத்தியமில்லை - தொழில் அமைச்சர்

ETF, EPF நிதியத்துக்கு வரி செலுத்துவது சாத்தியமில்லை - தொழில் அமைச்சர்

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் கிடைக்கும் நிதி வருமானமாக கருதி வரி செலுத்த தாம் தயாராக இல்லை என்று நிதியமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 நிதியத்திற்கு முதலீடு மூலமாக கிடைக்கும் வருமானத்தை நிதி வருமானமாக தேசிய வருமான வரி ஆணையாளர் காட்டியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நேற்று (09) எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

''இது வர்த்தமானியில் மாத்திரம் வந்த விடயம் அல்ல. இதற்கு முன்னர் வருமான வரி திணைக்களத்தினூடாகவும் ETF, EPF நிதியில் செய்யப்படும் முதலீடுகளினூடாக பெறப்படும் நிதி அந்த சட்டத்தினூடாக அந்த நிதிக்கு வரி செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டது.

EPF உட்பட நிதியங்களுக்கு 25 வீத வரி - கடுமையாக எதிர்க்கும் ஊழியர் மத்திய நிலையம்

 எனினும் எமது அமைச்சு மிகத் தௌிவான கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. அது பிழை. மாதக்கணக்காக இவ்விடயம் தொடர்பில் நாம் இது குறித்து தெரிவித்துள்ளோம். அதுதான் எமது நிலைப்பாடு. அணையாளர் எம்மிடம் கோரியிருந்தார் வரி செலுத்துமாறு, நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image