60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 8 இலட்சம் பேர் இதுவரையிலும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என்று சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு, வைரஸ் காய்ச்சல், டெங்குப் பரவல் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக பரசிற்றமோலுக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பில் அநீதி இழைக்கப்பட்ட அனைத்து பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர் என அனைவரும், இரண்டு பக்கங்கங்களில் தங்களது மேன்முறையீட்டை சமர்ப்பிக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆலமரத்தை வெட்டும்போது இதன் கிளையொன்று வீழ்ந்ததால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முழுவதும் சுமார் 9,000 கிராம சேவகர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று உள்விவகார அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.
ஆசிரியர் சேவையில் இணைய எதிர்பார்த்து காத்திருக்கும் பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான அறிவித்தலை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை நிலையத்தின் பிரதான செயலாளர் சந்திர சூரிய ஆராய்ச்சி வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் மற்றும் கன்னம் சிவந்து காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பதுளை மாவட்டத்தில் இழுத்தடிப்பு செய்யப்படும் ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.