சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

உடன் அமுலாகும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு, அரச தாதியர் சங்கத்திற்கும், அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பரீசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேதன உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் நேற்று 4வது நாளாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் அண்மையில் இடம்பெற்ற  பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்தன

இதனடிப்படையில் தாதியர்கள், துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரதிவாதிகளான தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக சட்டமா அதிபர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை பரீசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image