காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவதானியுங்கள்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவதானியுங்கள்

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் மற்றும் கன்னம் சிவந்து காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய எச்சரித்துள்ளார்.

அவ்வாறு கண்கள் மற்றும் கன்னம் சிவப்பதற்கு குழந்தைகளில் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் ( Multisystem Inflammatory Syndrome in Children - MIS-C).பாதிப்பாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே இந்நிலை குறித்து பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நுரையீரல், இதயம், சிறுநீரகம், மூளை, தோள், கண்கள், இரைப்பை மற்றும் குடல் உறுப்புக்கள் உட்பட உடலின் ஏனைய பாகங்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

இதுபோன்ற அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நிலைமை மோசமாகி, குழந்தையின் இதயம் மோசமாகப் பாதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார். கோவிட், டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் போன்ற நோய்கள் இந்த நாட்களில் பரவுகின்றன, மேலும் ஒரு குழந்தை காய்ச்சலினால் பீடிக்கப்பட்டால் உடனடியாக தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image