ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாதுள்ளவர்களிடம் மேன்முறையீடு கோரப்பட்டுள்ளது

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாதுள்ளவர்களிடம் மேன்முறையீடு கோரப்பட்டுள்ளது

ஆட்சேர்ப்பில் அநீதி இழைக்கப்பட்ட அனைத்து பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர் என அனைவரும், இரண்டு பக்கங்கங்களில் தங்களது மேன்முறையீட்டை சமர்ப்பிக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பயிலுநர் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர் என அரச ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாதோரை, ஆட்சேர்க்குமாறு வலியுறுத்தி நாளையதினம் (21) முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியயோகத்தர் சேவை மத்திய நிலையம் முன்னெடுக்க உள்ளது.

இதன்போது, ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாத பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை நிலையத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மகஜர் கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது மேன்முறையீட்டை இரண்டு பக்கங்களில் பதிவுசெய்து அவற்றை கொண்டுவருமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மேன்முறையீடுகளை, தங்களது மகஜருடன் இணைத்து ஜனாதிபதியிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சந்தன சூரிய ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image