உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

தற்போது இடம்பெற்று வரும் கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு போலியாக தயாரிக்கப்பட்ட நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் பரீட்சார்த்திகளை அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த போலி நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்தியநிலையங்களுக்கு வரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சரியான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த போலி நேர அட்டவணைக்கு பரீட்சார்த்திகள் ஏமாற்றமடைவதை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை மாத்திரம் பிற்பகல் 2 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகின்றது. ஏனைய தினங்களில் பிற்பகல் ஒரு மணிக்கே பரீட்சை ஆரம்பமாகும்.

முற்பகல் வேளையில் இடம்பெறும் பெரும்பாலான பரீட்சைகள் காலை 8.30 அளவில் ஆரம்பமாவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

120,000 பட்டதாரிகளின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image