பூஸ்டர் தடுப்பூசியை இம்மாதம் முடிவடைய முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
All Stories
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் 16.6 வீத மாணவர்கள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்குள்ளாகின்றனர் என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் வாயிலில் மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காகித தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் நியமிக்கப்பட்ட திகதிகளில் நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு அல்லது ஏற்கனவே உள்ள கையொப்பங்களைப் பயன்படுத்துவதற்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருக்கின்ற ஆசிரிய உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆட்சேர்க்கப்பட உள்ள பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிககளை ஆட்சேர்ப்பது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அவசர அறிவித்தலை விடுத்துள்ளது.
அரச மற்றும் மாகாண அரச சேவையின் கீழ் இதுவரை பெயர் குறிப்பிடப்படாத 01.03.2022 மற்றும் 01.04.2022 ஆகிய தினங்களில் நிரந்தர நியமனம் பெற வேண்டிய பட்டதாரிகள் இருப்பின் அரச நிருவாக அமைச்சிற்கு விஜயம் செய்து அவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரியொருவருக்கு தெரியப்படுத்துமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கோரியுள்ளது.
பயிலுநர் பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்கும் திட்டத்தின் கீழ் 2018,2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் 2022 தொடர்பில் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது.
நாளை (21) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.