பால்மா விலை தொடர்பில் வெளியான தகவல்

பால்மா விலை தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலை, நாளைய தினம் அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா கிலோ ஒன்றின் விலை, 500 அல்லது 600 ரூபாவினால் அதிகரிக்கப்படக்கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.
 
அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலை, 260 ரூபா அளவில் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில், பால்மாவின் விலை இரு தடவைகள் அதிகரிக்கப்பட்டன.
 
தற்போது சந்தையில், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 540 ரூபாவாகவும். ஒரு கிரோகிராம் பால்மா பொதியின் விலை ஆயிரத்து 345 ரூபாவாவும் உள்ளது.
 
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல். இன்று இடம்பெறுவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
சூரியன் செய்திகள

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image