பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

நேற்று (18) முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.

எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், எதிர்வரும் காலங்களில் நான்காவது கொவிட் தடுப்பூசி மாத்திரையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்கள் திரட்டுதல் நேற்று (18) முதல் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image