ஆர்ப்பாட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டாம் - டொக்டர் தீபால் பெரேரா

ஆர்ப்பாட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டாம் - டொக்டர் தீபால் பெரேரா

கொவிட் 19 பரவும் ஆபத்து உள்ளமையினால் பெரியவர்கள் குழந்தைகளை சனநெருக்கடியுள்ள ஆர்ப்பாட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டாம் என்று சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட்19 தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்வதால், பெற்றோர்கள் விவேகமான முறையில் செயல்பட வேண்டும் மற்றும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு 12 வயதுக்கு குறைந்த தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகிய 10 சிறுவர்கள் ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கொவிட் தொற்று நிலவுவதாகவும் பெரும்பாலான மக்கள் கொவிட்டை தற்போது மறந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். 12 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு இன்னமும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. பெற்றோர் மற்றும் வளர்ந்தோரின் பொறுப்பற்ற தன்மையினால் தொற்றுக்குள்ளாகினால் அவர்கள் பலவீனமடைந்து விடுவார்கள் என்றும் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image