பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்குதல்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்குதல்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் வௌியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கடந்த 4ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக அலுவலக கொடுப்பனவை வழங்குதல்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக அலுவலக கொடுப்பனவை வழங்கும்போது, சில பிரதேச செயலக காரியாலயங்கள் ஊடாக உரிய வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கின்றது என்பதையும், சில பிரதேச செயலக காரியாலயங்கள் கொடுப்பனவு  வழங்கும் நடவடிக்கைகளை உரிய வகையில் முன்னெடுக்க வில்லை எனவும் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக கொடுப்பனவை வழங்கும்போது கீழ்க்கண்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தயவுடன் அறியத் தருகின்றோம்.

மாநகர சபை மற்றும் நகர சபை எல்லைக்குள் 1,000 ரூபாவும்

பிரதேச சபை எல்லைக்குள் 750 ரூபாவும்

இதன்படி இந்த கொடுப்பனவு வழங்கலானது பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுஎல்லைக்கு அப்பால் செல்லாமல், மாதாந்தம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளத்துடன் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு உரித்தான பொது இடங்களில் காரியங்களை நடத்திச்செல்லும் செல்லும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக அந்த காரியாலயங்களில் மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கும் அலுவலகத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும் உரிய கொடுப்பனவை அவர்களின் சம்பளத்துடன் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

278368707_541579114224570_3119144106835185269_n.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image