நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடன் - முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடன் - முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடன் செலுத்தவேண்டியவர்களாக உள்ளனர் என்று முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமொன்று வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகமாக தாம் பதவியில் இருந்தபோது வௌியிட்ட அறிக்கையை தாம் வௌியிட்டபோது ஒரு தனிநபருக்கான செலுத்தவேண்டிய கடன் தொகை 5,24000 ரூபாவாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்டுள்ள அவர், வரவுசெலவு சமப்படுத்துவதற்காகவே பெருந்தொகையான பணம் கடனாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் மொத்த கடன் தொகை 20 டிரில்லியன் ரூபாவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான முக்கிய காரணம் 2015ம் ஆண்டு இடம்பெற்ற மத்தியவங்கி ஊழல் சம்பவமாகும் என்று தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாணயம் நிதியத்தின் கடன் மற்றும் உதவியின் அடிப்படை நோக்கத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் ஒவ்வொரு டொலருக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும். அப்பணத்தை முற்றுமுழுதாக நியாயமான முறையில் நாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று உணர்ந்தால் சர்வதேச நாணய நிதியம் எவ்வித கடனுதவியைும் வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - ஏஷியன் மிரர்

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image