இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
All Stories
ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் செயன்முறை ரீதியில் ஆங்கில மொழியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
பெற்றோல் விலை குறைக்கப்பட்டபோதிலும் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைப்பது சாத்தியமில்லை என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
8,000ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் கருத்து வெளியிடுவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானதாகும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
டீசல் விலையை குறைப்பதன் மூலம் மக்கள் பயனடைவார்கள், பெற்றோல் விலை குறைப்பினால் அல்ல என அகில இலங்கை மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை வேன் போக்குவரத்து சங்கம் உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிிவத்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஏனைய அரச அதிகாரிகளை போன்றே மருத்துவர்களும் 60 வயதில் கட்டாயமாக ஒய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டத்தக்கது என்றும் இளம் மருத்துவர்களுடைய எதிர்காலத்திற்கு இத்தீர்மானம் மிகவும் சிறந்தது என்றும் அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
உலகில் பட்டியில் வாடும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம், அதற்காக நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வருடத்திற்கு அரச சேவைக்கு அத்தியாவசியமான நிபுணர்களை மாத்திரம் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரைக்கு அமைய இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.
பெருந்தோட்ட சேவையாளர்கள் தமக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நேற்று (01) தலைவாக்கலை நகரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான தோட்ட சேவையாளர்கள் ஆக்ரோசத்துடன் கலந்து கொண்டனர்.