அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டதாரிகள் தொடர்பில் நீங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு அவசியமான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் இறுதி செய்து அமைச்சரவை அனுமதி பெறப்படவுள்ளது. அதன் பின்னர், பரீட்சைகள் திணைக்களம் ஊடாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்ற அனைவரிடமும் விண்ணப்பம் கோரி நாடளாவிய ரீதியில் வயதில்லை பிரச்சினையின்றி பரீட்சை ஒன்றை நடத்தி அதில் பெறப்படுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் மாகாண சபை ஊடாக நேர்முகத் தேர்வை நடத்தி நியமனம் வழங்கப்படும்.

அத்துடன் மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு தேசிய கல்வியல் நிறுவனத்தில் ஓராண்டு கால டிப்ளமோ பயிற்சியை வழங்கி பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக அவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் 8,000 ஆசிரியர்களை புதிதாக நியமிக்க பரீட்சை நடத்த நடவடிக்கை

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை குறித்து தொழிற்சங்கம் ஒன்றின் கருத்து

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image