மருத்துவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வயது குறித்த அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கது!

மருத்துவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வயது குறித்த அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கது!

ஏனைய அரச அதிகாரிகளை போன்றே மருத்துவர்களும் 60 வயதில் கட்டாயமாக ஒய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் பாராட்டத்தக்கது என்றும் இளம் மருத்துவர்களுடைய எதிர்காலத்திற்கு இத்தீர்மானம் மிகவும் சிறந்தது என்றும் அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறை பாதிக்கப்படும் என்று சிலர் கூறும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பல திறமையான இளம் வைத்தியர்கள் நாட்டில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களுக்கான கட்டாய ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 200 மருத்துவர்கள் கடிதமொன்றை கையளித்துள்ளனர். இதனால் நாட்டில் எந்தவகையிலும் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படாது என்றும் டொக்டர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களல் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் அப்பிரதேசங்களை விட்டு வௌியேற விரும்பாமையினால் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக உயர்த்துமாறு கோருகின்றனர் என்றும் இதற்கு அரசாங்கம் பதலளிக்கக்கூடாது என்றும் டொக்டர் ருக்‌ஷான் கோரியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image