கொவிட் பரவலினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் ஹோட்டல் துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
All Stories
இன்றைய தினத்தை (21) எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ள ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது.
10,000 புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் மூன்று வெளிநாட்டு முதலீடு திட்டங்கள் அடுத்த வருடம் நாட்டிற்குக் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து இலங்கைக்கு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கொரோனா வைரஸ் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தில் மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த கடுமையான மட்டுப்படுத்தலை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா தொற்றை பொறுத்தவரையில் அடுத்தவாரம் தீர்வுக்குரிய காலப்பகுதியாகும். ஏனெனில் வைரஸ் செயற்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு (2020) ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் அந்நிய செலாவணி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய கேட்டரிங் சேவை ஊழியர்கள் 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்படாத மற்றும் கடந்த வருடம் (2019)ம் ஆண்டு பயிற்சியில் இணைக்கப்பட்டு பயிற்சி பூர்த்தியடைந்த நிலையில் இன்னும் நியமனம் பெறாத பட்டதாரிகள் தமக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பட்டதாரிகள் தேசிய மத்திய நிலையம், அபிவிருத்திசேவை அதிகாரிகள் சங்கம் ஆகிய இணைந்து அரச நிர்வாக சேவை அமைச்சின் முன்பாக இப்போராட்டத்தை நேற்று (14) முன்னெடுத்தன.
இதன்போது விசேட தேவை, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள், இரு மாவட்டங்களில் பதிவு கொண்டவர்கள் உட்பட பல விடயங்களை காரணம் காட்டி வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகள் வழங்கப்படாத பட்டதாரிகள் பிரச்சினைக்கு உரிய, ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு இதுவரை கிடைக்காமை...
01.08.2019 மற்றும் 16.09.2019 ஆகிய தினங்களில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்படுகின்றமை, உரிய நேர்முகத்தேர்வு இதுவரை நடத்தப்படாமை என்பன இவ்வார்ப்பாட்டத்திற்கான பிரதான காரணங்களாகும்.
மேலதிகமாக 10,000 பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டபோதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேலையில்லா பட்டதாரிகள் விசனம் வௌியிட்டுள்ளனர்.
இதனால் வேலையில்லா பட்டதாரிகள் கடும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளனர் என்று ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டபோதிலும் அதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்க முன்வருவது குறைவாகவேயயுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாளை (22) பொதுச்சேவை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஹொரன பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இங்கிரிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் எல்.பி.எல் பிரியந்த தெரிவித்துள்ளார். இவர்களில் 37 இந்தியர்களாவர்.