ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய கேட்டரிங் சேவை ஊழியர்கள் 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேட்டரிங் சேவை ஊழியர் ஒருவருக்கு கடந்த திங்கட் கிழமை நடத்தப்படட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய ஊழியர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரொஸ்டர் அடிப்படையில் தொற்றுக்குட்பட்ட ஊழியர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் பரவி வரும் நிலையில் உலக சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதன் சேவைகளை முன்னெடுத்து வருகிறது. பணியிடத்தில் தொற்று பரவாமல் பாதுகாப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் சேவை முன்னெடுத்து வருகிறது. மேலும் தொடர்ந்தும் சுகாதார மற்றும் ஏனைய அரச அலுவலகங்களுடன் நெருக்கமாக பணியாற்றும் என்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் சேவை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image