பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான இன்றைய பேச்சுவார்த்தை இறுதித் தீர்மானமின்றி முடிவடைந்தது.
 
 தொழில் அமைச்சருக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தினருக்கும் இடையில் இன்று (21) பேச்சுார்த்தை இடம்பெற்றது.
 
இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாமையால், பேச்சுவார்த்தை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபாவாக இருக்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் இன்றைய பேச்சுவார்த்தையில் தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
 
இந்தநிலையில், நாளாந்தம் மேலதிகமாக 2 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்தினர் தங்களது யோசனையை தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன், தொழிலாளர்களின் தொழில் நிறைவடையும்போது, பணிக்கொடை கொடுப்பனவை கொடுக்கும் விடயத்தில், அவர்கள் போதியளவு தொழிலில் ஈடுபட்டிருக்கவில்லை என முதலாளிமார் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கமைய ஒவ்வொரு தொழிலாளரும் வருடத்திற்கு 180 நாட்கள் கட்டாயமாக சேவையில் ஈடுபட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்தினர் இதன்போது யோசனை முன்வைத்துள்ளனர்.
 
இதன்போது யோசனை தெரிவித்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாளொன்றுக்கு மேலதிகமாக ஒரு கிலோ வழங்குவதையும், 180 நாட்கள் யோசனையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
 
விடயங்களை ஆராய்ந்த அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் எந்த ஒரு வகையிலும் மாற்றப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்க முடியாத ஏதாவது ஒரு நிறுவனம், அந்த தோட்டத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு கையளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் மூலமோ அல்லது வேறு முகாமைத்துவ நிறுவனம் மூலமாக அந்த தோட்டத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கணிஷ்க வீரசிங்க மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளும், தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி ப்ரபாத் சந்ரகீர்த்தி, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி அகில கயான் கௌசல்ய ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
 
 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image